சசிகலாவின் உண்மை
சசிகலா அவர்களின் பேச்சு, அதிமுகவில், அதிமுக வாக்கு வங்கியில் ஒரு சலசலப்பை நிச்சயம் ஏற்படுத்தும், ஓ. பி. எஸ் அவர்களின் தர்மயுத்தம், சசிகலா அவர்களின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அத்தனையும் திட்டமிடப்பட்ட செயல் என அவர்களின் தற்போதைய பேச்சும் பேட்டியும் உணர்த்துகிறது....அதே போல மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் இறந்த தேதியில் ஏற்படுத்தப்பட்ட சந்தேகமும் தீர்ந்துள்ளது, அடித்து மயக்க நிலையில் கொண்டு செல்லப்பட்டார் என்பதும் கட்டுக்கதை என தற்போது உணர தொடங்கியுள்ளனர் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும், தற்போதைய நிலையை பார்த்தால் அதிமுக தலைமை அப்போது சசிகலா அவர்கள் கையில் சென்றுவிட கூடாது, சென்றால் அதிமுகவை செதில் செதிலாக உடைக்க அது பெரும் தடையாக இருக்கும் என எண்ணியே 4 வருட சிறை தண்டனையும் கொடுத்து அனுப்பிவைக்கபட்டாரோ என மெல்ல சிந்திக்க துவங்கியுள்ளனர் அதிமுகவினர், இதன் காரணமாக சசிகலா மீது அதிகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பரிவும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை...